+ 2 பொது தேர்வுகள்இன்று 13 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் 03 ஆம் தேதி வரையிலும், +1க்குகான தேர்வு 14 ஆம் தேதி நாளை துவங்கி அடுத்த மாதம் 05 வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் +2 மற்றும் +1 பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். +2 தேர்வை 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34,392 மாணவ மாணவியரும், +1பொதுத் தேர்வினை 14,088 மாணவர்களும், 16,678 மாணவிகளும் என மொத்தம் 30766 மாணவ / மாணவியர்களும் பொதுத் தேர்வினை எழுத உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் சார்ந்த துறை மூலமாக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 133 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30‌ வழித்தட அலுவலர்கள், 265 நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை கண்காணிப்பாளர்கள் 229 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 9 முதல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதுவதற்காக மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தங்களை தயார் செய்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு மேலும் ஊக்கப்படுத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிந்தாமணியில் அவர் படித்த பள்ளியான இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் அவருடைய இளமை கால நினைவுகளை நினைவு கூர்ந்து பள்ளி சீருடையுடன் சென்று தேர்வு நடக்கும் மையங்கள், கழிவறைகள், தேர்வு எழுதும் வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாணவர்கள் எந்த வித தயக்கம் பயம் இன்றி தேர்வு எழுத மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தியதுடன் வாழ்த்து தெரிவித்து கொண்டார் ..

இதேபோல் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *