தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 20  நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ருத்ராட்சம் மாலை அணிந்து, பட்டை போட்டு  – நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான   2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.  மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம். குறிப்பாக காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையை மீறி ஆற்றில் இறங்கி போராடிய விவசாயிகள் 25 பேர்களை கைது செய்தனர்.  மேலும் அனுமதி பெற்று அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்களையும் காவல்துறை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்கவில்லை, விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.  இந்நிலையில், தமிழக அரசு எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால் இதை கண்டித்து இன்று ருத்ராட்சம் மாலை அணிந்து, பட்டை போட்டு  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழ்நாடு அமைச்சர் கே. என். நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் எங்களுடைய கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு எப்போது தேவையோ அப்போது காவேரியில் இருந்து தண்ணீர் திறக்காமல், தற்போது திறந்தால் என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *