கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி விழாப் பேருரையாறறினார்.
அதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி விழாப் பேருரையாற்றினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில். மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா சேலத்திலும் நடைபெறுகிறது இதை முடித்துக்கொண்டு நான் சேலம் செல்ல வேண்டும்
திருச்சி மாவட்டத்தில் 42 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 21,000 பேருக்கு இன்று வழங்கியுள்ளோம். என பேசினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்,
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி சௌந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார் கதிரவன் மற்றும் மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.