44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வாக திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 2140 மாணவ, மாணவிர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் சதுரங்கம் பாடம் நிகழ்வு :44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிசென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.இதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2,120 மாணவ , மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி சுமார் 2 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரபலமான பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து ,செஸ் விளையாட்டிற்கான பயிற்சி பாடம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ , மாணவிகளுக்கும் செஸ் செட் வழங்கப்பட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உலக சாதனைக்கான சான்றிதழும் ,பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்களையும் , பதக்கங்களையும் சாதனை புத்தகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.ஒரே இடத்தில் 2,140 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற நிகழ்வு எலைட் உலக சாதனைப் புத்தகம், ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என நான்கு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது நிகழ்வில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர காவல் ஆணையர் கார்த்திக்கேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித், மாநாகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்