திருச்சியில் JCI Rock town 49 ஆவது பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் அன்பு தனபாலன் 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அதில் அவர் JCI யின் கோட்பாடுகள் பற்றியும் JCI ஆல் நாம் எவ்வாறெல்லாம் பயன் பெறலாம் என்பது பற்றியும் மிகவும் எடுத்து விளக்கினார் மேலும் அவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே சி ஐ ராக் டவுனின் தலைவர் ஜெசி கிரேசி அவர்களை வாழ்த்தி ஆலோசனைகள் வழங்கினார்.மற்றும் சிறப்பு விருந்தினரான JKB என்று அழைக்க கூடிய கார்த்திக் பாபு அவர்கள் ஜே சி ஐ பற்றியும் அதன் மாண்பு பாரம்பரியம் மற்றும் அதன் உன்னத நோக்கம் பற்றியும் தனக்கே உரித்தான எளிமையான மற்றும் இனிமையான நடையிலே மிகவும் அழகாக எடுத்துரைத்தார்.

மேலும் அவர் 2023 ஆம் ஆண்டின் தலைவர் ஆன ஜே சி வில்லியம் அவர்களை பாராட்டியும் அவர்களின் ஓராண்டு சாதனைகளையும் செயல்களையும் வாழ்த்தியும் இந்த ஆண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேசி கிரேஸ் அவர்களை வாழ்த்தியும் எவ்வாறு இந்த ஆண்டினை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினார்…. முன்னதாக இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் யோசி நிறுவனத்தை சேர்ந்த ஆதி அவர்கள் அனைவருக்கும் வரவேற்பு நல்கினார்.

இந்த ஆண்டின் புதிய தலைவரான ஜே சி கிரேஸ் அவர்களுக்கு மண்டல தலைவர் மண்டல ஆட்சி மன்ற குழுவினர் விழாவின் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஜே சி யை ராக் டவுனின் முன்னாள் தலைவர்களான ஜே சி இரா பிரசாத் ஜே சி சிவக்குமார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது 15 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் ஜே சி யின் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.இந்த நிகழ்வின் நிறைவாக ஜே சி சந்தோஷ் குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *