திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் லால்குடி பகுதியில் 10.30mm மழையும், மண்ணச்சநல்லூர் பகுதியில் 7.40mm மழையும், மணப்பாறை பகுதியில் 13.40mm மழையும், ஸ்ரீரங்கம் பகுதியில் 63.20mm மழையும், திருவரம்பூர் பகுதியில் 22.30mm மழையும்,

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 45.80mm மழையும், திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 17.60mm மழையும், குறிப்பாக திருச்சி ஜங்சன் பகுதியில் நேற்று இரவு அதிகபடியாக 92.00mm கனமழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

இதனால் முக்கிய பகுதிகளான மேலப்புதூர் சுரங்க மேம்பாலம் முதலியார் சத்திரம் ரயில்வே சுரங்க மேம்பாலம், எடத்தெரு பகுதி, துரைசாமிபுரம், காஜா பேட்டை, எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, பெரிய மிளகுபாறை ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்