தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கழகத் தோழர்களுக்கு விடுத்துள்ள அன்பு வேண்டுகோள் !
நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக மக்களுக்கு சிறப்பாக கழக ஆட்சியை நடத்த வேண்டும் என்று சிந்தனையில் செயல்பட்டு வருகின்றார். தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றானது நாளுக்கு நாள் மிக அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு ஆணை பிறப்பித்துள்ளது .இச்சூழலில் நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நான் அமைச்சர் பொறுப்பை ஏற்று திருச்சிக்கு வருகின்ற போது எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று என்னை நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் அனைவரும் கூடுவது என்பது கழக அரசால் போடப்பட்ட ஆணையை நாமே புறக்கணிக்கிறோம் என்று ஆகிவிடும். வருகின்ற மே 24-ஆம் தேதி வரை நீங்கள் சென்னையிலோ, திருச்சியிலோ, நேரில் சந்திக்க வருவதைத் தவிர்த்திட வேண்டும். இந்த ஊரடங்கு உத்தரவு, தளர்வுகள் ஏற்பட்ட பின்பு நீங்கள் என்னை சந்திக்கலாம். என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation