திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் எண் 5 புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு ‘வழங்கப்படும் காலை இட்லி, மதியம் சாம்பார் சாதம் / தயிர் சாதம் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு சுவையாக உணவினை வழங்குமாறும் அம்மா உணவகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் விஜயா ஜெயராஜ், எஸ்.விஜயலட்சுமி, பைஸ் அகமது மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.