கரூர் மாவட்டம் , கிருஷ்ணராய புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 01.08.2022 அன்று சாலை விபத்தில் காயமுற்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் . மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 4-ம் தேதி அன்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து உடல் உறுப்பு தானம் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது . அவரது தந்தை மற்றும் தங்கை ஒப்புதல் பெற்றப்பிறகு 5-ம் தேதி அன்று அவரிடமிருந்து இரண்டு சிறுநீரகங்கள் , கல்லீரல் அறுவை சிகிச்சை மற்றும் இரண்டு கண்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது . மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மரியாதை செலுத்தப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது . உறுப்பு வேண்டி பதிவு மேலும் உடல் Transtan வழிகாட்டுதலின்படி , செய்தவர்களின் வரிசையின் படி , தகுதியான நபருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்புகளில் , ஒரு சிறுநீரகம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார் . மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறுநீரக நோயாளிக்கு பொருத்தப்பட்டது . கல்லீரல் திருச்சி தனியார் கல்லீரல் மருத்துவமனையிலுள்ள நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது . மேலும் கண்தானமும் தகுதியான பார்வை இழந்த நபர்க்கு பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் 4-வது முறையாக மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *