திருச்சி மாவட்டம் துறையூர் அருகே

எரகுடியில் உள்ள அஞ்சலகத்தில் நேற்று இரவு கதவின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து இரும்பு பெட்டியை திறக்க முயற்சி செய்து அதன் பலன் அளிக்காமல் அருகிலிருந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் மூன்று வெள்ளி கொலுசுகள் ரொக்கம் 7000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் .

இந்நிலையில் பாலகிருஷ்ணன் வெங்கடாசல புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கல்யாணத்திற்காக சென்று இரவு அங்கேயே தங்கி விட்டார். காலையில் தனது சொந்த ஊரான எரகுடிக்கு வந்து தனது வீட்டை பார்க்கும்போது தனது வீடு திறந்து இருப்பதும் வீட்டில் உள்ள பீரோ உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி பீரோவில் உள்ள நகையை பார்த்தபோது அது காணாமல் போயிருப்பது தெரிய வந்தது இதனால் உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் கவிதா மற்றும் பாலகிருஷ்ணன் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எந்தத் தடையும் கிடைக்காததால் கைரேகை நிபுணரறையும் மோப்ப நாயும் வரவழைத்தனர் . சற்று தூரம் ஓடிய மோப்ப நாய் நின்றுவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *