திருச்சி மாவட்டம் துறையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி மதியம் 2 00 மணி அளவில் தனியார் பேருந்து சென்றது. பேருந்தை ஒட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஓட்டுநராகவும் சோபனாபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நடத்துனவராகவும் பணியில் இருந்தனர்.

பேருந்து முருங்கபட்டி அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக டீசல் டேங்க் கழண்டு கீழே விழுந்தது இதனால் உராய்வு ஏற்பட்டு புகை வர தொடங்கியது இதனை சைடு மிர்ரரில் பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டு தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்கார். தீ மல மல என்று பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்