திருச்சி மாவட்டத்தில் மத்தியப் பேருந்து நிலையம் அருகே ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் டீக்கடை, டிபன் கடை, பெட்டிக்கடைகள் ஆம்னி பேருந்து அலுவலகம், பழக்கடை உள்பட 60 வியாபாரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ரயில்வேக்குச் சொந்தமான இந்த இடத்தை சென்னையைச் சேர்ந்த தேவக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்தார்.

இதன்மூலம் அங்கு ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த ஒர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க தலா 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என 60 பேர் மொத்தம் சுமார் 90 லட்சம் ரூபாயை தேவக்குமாரிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். வைப்புத் தொகையைத் தொடர்ந்து மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இது குறித்து வியாபாரி கலியமூர்த்தி செய்தியாளர்களிடர் கூறுகையில்..,

 ஒப்பந்ததாரர் வெறும் மேற்கூரை மட்டுமே அமைத்துக் கொடுத்தார். சுற்றுச் சுவர், தரைத்தளம், தண்ணீர் குழாய் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் எங்களது சொந்தச் செலவில் செய்துகொண்டோம். இந்நிலையில் ஓராண்டு முடிந்த் பின்னர் தற்போது ரயில்வே துறை அந்த இடத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவருக்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது. புதிதாக குத்தகை எடுத்தவர் எங்களிடம் வந்து மீண்டும் வைப்புத்தொகை ஒன்றரை லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார். ஏற்கனவே தேவக்குமாரிடம் கொடுத்த பணத்தை நீங்கள் அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். ஆனால் தேவக்குமாரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார்.வைப்புத்தொகை செலுத்த புதிய ஒப்பந்ததாரர் கெடு விதித்துள்ளார்.

 புதிய ஒப்பந்ததாரர் விதித்த கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து கடைகளைக் காலி செய்ய சொல்லி வியாபாரிகளை ஒப்பந்ததாரர் ஆதரவாளர்கள் மிரட்டுகின்றனர். கடைகளை அடித்து உடைத்து சேதப்படுத்துகின்றனர். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்