மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் மேல்பத்து பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மகன் 25 வயதான புகழேந்தி. இவர் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உத்தமர் கோயில் ரயில் நிலையம் தண்டவாளப் பகுதியில் புகழேந்தி காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 சடலமாக கிடந்த புகழேந்தி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, தண்டவாளத்தை கடக்கும் முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொன்றனரா இல்லை வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவருடைய மோட்டார் பைக் தண்டவாள பகுதி அருகே நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று தனது இரு சக்கர வாகனத்தை அடகு வைத்து ரூபாய் 25000 கடன் வாங்கியதும் தெரிய வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *