திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி “பிரக்யான்” தொழில்நுட்ப மேலாண்மை விழாவை முன்னிட்டு அதன் இயக்குனர் அகிலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.ஆர்.எஃப் 2021 தரவரிசையில் , நாட்டின் அனைத்து என்.ஐ.டிக்களிலும் முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் 9ம் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் 23ம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த வியூகத் திட்டமானது, நெகிழ்வுத் தன்மைமிக்க பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தொழிற்சாலைகளுடனான கூட்டு முயற்சிக்கு வித்திட்டல், சிறந்த நிறுவனங்களில் இருந்து மதிப்பெண் பரிமாற்றம் மற்றும் பலவற்றால் புதிய கல்வி கொள்கை 2020வுடன் ஏற்கனவே ஒன்றியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள, மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தும் இணையவழிப் பாடங்கள் மற்றும் படிப்புகள் போன்ற இன்னும் பல முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்த வியூகத் திட்டத்தை மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை முதல் மூன்று நாள் தொழில்நுட்ப மேலாண்மை “பிரக்யான் “நிகழ்வு நடைபெற உள்ளது.

“பிரக்யான்” முழுமையான இணையவழி விழாவாக ‘ மெட்டாவெர்ஸ் ‘ என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டு, முன்னுதாரணமாக விளங்கியது. பிரக்யான் டாக்ஸ் மற்றும் பேக் ஸ்டேஜ் கேள்வி – பதில் நிகழ்ச்சிகளில், புகழ்பெற்ற பேச்சாளர்கள், அறிஞர்கள், ஆளுமைகள் பங்கேற்ற பல இணைய வழி அமர்வுகளைக் கொண்டிருந்தது.’நெக்ஸஸ் ‘ என்ற கருப்பொருளில், இந்த ஆண்டின் பிரக்யான் ஹைபிரிட் முறையில் (நேரடி மற்றும் இணையவழி இரண்டிலும்) நடைபெற உள்ளது. இவ்விழாவின் பிரக்யான், இவ்விரு உலகங்களிடையே ஒரு நேர்மறையான இணைப்பினை ஏற்படுத்தவும், இரு உலகங்களின் நன்மைகளையும் எடுத்துக் கொண்டு, தொழில்நுட்பத்தைக் கொண்டாட விழைகின்றது.இந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருச்சி என்.ஐ.டி பிரக்யான் தொழில்நுட்ப மேலாண்மை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் கலந்து கொள்கின்றனர் என கூறினார். இந்நிகழ்வில் டீன் குமரேசன், மாணவர் சங்க தலைவர் மாதவ கலாவன், பேராசிரியர் பக்தவத்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்