திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்குத் தொகுதி தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்துகொண்டு திருச்சி மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்து நாட்டின் மதச்சார்பின்மை காக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஹாலித் முகமது,விம் மாநில தலைவர் நஜ்மா பேகம்,எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி ,இமாம் முஹம்மது சிராஜுதீன் மன்பஈ திருச்சி மாநகர செயலாளர் ஜமாத்துல் உலமா சபை,ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி, தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைகனி, முகமது சித்திக், மாவட்ட செயலாளர்கள் மதர்.ஜமால் முஹம்மது மற்றும் ஏர்போர்ட். அப்துல் மஜீத், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் முகமது சித்தீக், மாவட்ட பொருளாளா். முஹம்மது சுஹைப், தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்குருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக் முஹம்மது, வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, வா்த்தகா் அணி மண்டல தலைவா். சாதிக் பாஷா, விவசாய அணி மாநில பொருளாளா். சஹாபுதீன் SDTU மாநில செயலாளா். ரபீக் மற்றும்,கிழக்கு தொகுதி தலைவர் தர்கா முஸ்தபா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா, ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முஹம்மது மர்சூக், STDU திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா, சுற்றுச்சூழல் அணி திருச்சி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, தொண்டரணி மாவட்ட தலைவர் டோல்கேட். அன்சாாி, WIM திருச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம், வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல தலைவர் முஹம்மது சதாம், ஊடக அணி திருச்சி மாவட்ட தலைவர் சதாம் உசேன் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மேற்கு தொகுதி துணை தலைவர் . ரியாஸ், தெளலத் நிஷா மேற்கு தொகுதி துணை தலைவர், முஹம்மது சலீம் மேற்கு தொகுதி செயலாளர்,மேற்கு தொகுதி துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், மற்றும் ந.சிராஜ் ,பத்ரு ஜமான் மேற்கு தொகுதி பொருளாளர்,மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கிதூர் முஹம்மது, சையது முஸ்தபா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக அமீர் பாஷா பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மண்டல தலைவர், விஸ்வநாதன் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவர், ஹரிஹரூன் பிள்ளை வெள்ளாளர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர், ஹக்கீம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணை தலைவர்,சகாயராஜ் திருச்சபை பாதிரியார், திருச்சி புனித மேரி கதீட்ரல் மறைமாவட்டம், தமிலாதன் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் (விசிக), மற்றும் திருச்சி மாவட்ட முக்கியஸ்தர்கள்,ஜமாத் நிர்வாகிகள்,தோழமை கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *