திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பகுதியில் உள்ள ESAF வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை வாலிபர் ஒருவர் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் நடந்து வந்து ஏடிஎம்மில் உள்ள இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனைக் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த வாலிபர் அசாருதீன் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து வாலிபர் அசாருதீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *