திருச்சி துறையூரை சேர்ந்த செல்வம் என்பவர் எலும்புசத்து குறைபாட்டினால் பாதிப்படைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி துறையூர் அபினிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவருக்கு குழந்தை பருவம் முதல் எலும்புச்சத்து குறைபாட்டினால் பாதிப்படைந்து நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்து பிறர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை முருகன் அரசு பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அதிலிருந்து கிடைத்த ஓய்வூதியத்தை வைத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது தந்தை இறந்து விட்டதால் அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தை வாழ வழி இன்றி படுக்கையில் கிடக்கும் எனக்கு வழங்கிட கோரி சென்னையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில் மனு அளித்து விண்ணப்பத்தி இருந்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து குழந்தை பருவம் முதல் பாதிப்படைந்து அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சம்பாத்தியம் பெற இயலா நிலையில் உள்ளதை மருத்துவமனை சான்றிதழில் குறிப்பிட்டு சான்று பெற்று அனுப்புமாறு மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி உள்ளனர் ஆகவே திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் எனது நிலையை நேரில் பார்த்து மருத்துவ சான்றிதழ் வழங்கி எனக்கு ஓய்வூதியம் பெற ஆவணம் செய்யுமாறு மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்