தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500 என விலை அறிவிக்க கோரி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டம் நடத்தினர் .

தற்போதைய விலை TPC ல் நெல் குவிண்டாலுக்கு ரூ .1,958 ( சன்னரகம் ) ரூ .1,918 ( மோட்டார் ரகம் ) விலையாக வழங்கப்படுகிறது . அதுவும் 1 கிலோவிற்கு ரூ .1 என்ற அடிப்படையில் 40 கிலோ மூட்டைக்கு ரூ . 40 பணம் வசூலிக்கப்படுகிறது . அதனை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் . ஒரு ஏக்கர் நெல் நடவு செய்தால் உழவு கூலியிலிருந்து நெல் அறுவடை செய்து TPC ல் போடுகிறவரை குறைந்தது ரூ .30 ஆயிரம் ஏக்கருக்கு செலவு ஆகிறது . ஆனால் ஒரு ஏக்கருக்கு நெல் 60 கிலோ மூட்டை 25 லிருந்து 30 மூட்டை வரை நெல் கிடைக்கிறது . 30 x 60 = 1800 கிலோ 1800 x 19.58 = 35,244 ரூபாய்க்கு நெல் TPC ல் விற்கப்படுகிறது . நெல் சாகுபடி செலவு ரூ . 30 ஆயிரம் கழித்தால் ரூ . 5244 விவசாயிக்கு மிஞ்சுகிறது . ஒரு நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சென்றால் 5 மாதத்திற்கு ரூ .25 ஆயிரம் சம்பாதிக்கலாம் இருப்பினும் உழவு தொழிலை விடக்கூடாது என நெல் சாகுபடியில் விவசாயி ஈடுபடுகிறான் .
எனவே முதலமைச்சர் மாறினால் நெல் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரம் மாறாது என தங்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்து உள்ளனர் எனவே நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500 என முதலமைச்சர் விலை அறிவிக்க வேண்டுமென கேட்டுக் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் . அது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published.