திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் . இந்நிகழ்வில் , மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி , அலுவலக மேலாளர்கள் சிவசுப்பிரமணியபிள்ளை ( பொது ) , சித்ரா ( குற்றவியல் ) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர் .

” நல்லிணக்க நாள் உறுதிமொழி “

நான் சாதி , இன , வட்டார , மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி , இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் . மேலும் , எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் , வன்முறையில் ஈடுபடாமல் , பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *