திருச்சியில் மக்கள் குரலோனுடன் குடும்ப விழா நிகழ்ச்சி திருச்சி கலை காவிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1985 முதல் 2005 பணியாற்றி நிகழ்ச்சி தொகுப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்த வந்த மக்கள் குரலோன். DJ .கிறிஸ்டோபருக்கு அவருடன் கலைக் காவிரியில் பணியாற்றிய நண்பர்கள் அவரை கௌரவிக்கும் வகையில் குடும்ப விழா நடத்தினார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களே சந்திக்கும் நிகழ்வு அனைவரும் ஆனந்த கண்ணீர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்தி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அந்த குடும்ப விழாவில் அருட்தந்தை லூயிஸ் பிரிட்டோ இயக்குனர் கலை காவேரி நுண்கலை கல்லூரி தலைமையிலும், சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் பின்னணி குரல் கிறிஸ்டோபர் பேசுகையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்றபோது டிவியில் என்னை அரவணைத்து என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது தொலைக்காட்சி தமிழில் சிறந்து விளங்கியதற்கு காரணமும் தொலைக்காட்சி என்று பெருமையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *