திருச்சி மாநகர் மாவட்ட பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாட்டரி விற்பனை செய்யும் கடை உரிமையாளரையும் முகவர்களையும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் 26 ம் தேதி தங்களிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் கடையில் வாங்கிச் செல்லக்கூடிய அப்பாவி நபர்கள் இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யக்கூடிய ஏஜென்ட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள மீன் மார்க்கெட் ,பழக்கடை, வாழைக்காய் மண்டி தாராநல்லூர் ,வரகனேரி தஞ்சை ரோடு பால்பண்ணை ஆகிய பகுதிகளில் படுஜோராக அடியார்களுடன் விற்பனை லாட்டரி ஏஜெண்டுகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு அளித்த போது மாவட்ட அமைப்புச் செயலாளர் எழிலரசன், ரபீக் பாய், ஹரிஹரன், முரளிதரன், கண்ணன், வடிவேல், முருகானந்தம், ஜெகதீஷ், ஐயப்பன், பிரகாஷ் பன்னீர் திருமலை ஜெகன் ரியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்