திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுகுமார் துரைசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

மேலும் விழாவில் நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா நிறுவனத் தலைவர் சி.கே. குமரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில், தன் வாழ்வின் நிகழ்வுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, தன்னுடைய அனுபவத்தின் வழி மாணவர்களுக்கு தன் தத்துவ அறிவுரைகளையும் வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இவ்விழாவில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2023 – 2024 ஆம் கல்வி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் சிறந்த மாணவர் விருது, இந்த ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் விருது மற்றும் சிறந்த துறைக்கான விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *