திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருள்மிகு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் அய்யனார் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார் அப்போது கோயிலின் உள்ளே உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த மாதம் 20ஆம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலை துறை கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எனப்பட்டது தெரியவந்தது. மேலும் குறைந்த அளவே உண்டியல் பணம் திருடு போயிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த கைரேகை நிபுணர்கள் கோயில் உண்டியல் மற்றும் பீரோ உள்ளிட்ட  பகுதியில் சோதனை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்