தமிழர் திருநாளாம் தை திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 14 பேர், உள்துறை பணியாளர்கள் 15 பேர், திருக்கோயில் பணியாளர்கள் 34 பேர், அன்னதான பணியாளர்கள் 7 பேர், என மொத்தம் 70 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்…

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாநகரச் செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்