திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரான தன்னை சாதி பெயரை கூறி்திட்டியும்,, வேலையினை விட்டு் விலகுமாறு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக கடந்தாண்டு டிசம்பர் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவியுடன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அர்ச்சகர் மகேஸ்குமார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற அவர் நீதிபதி வழங்கிய முன் ஜாமீனில் கூறியபடி நீதிமன்றத்தில் சூரிட்டியுடன் ( ஜாமீன்தார்ர்களுடன் ) தொடர்ந்து ஆஜராகத தால் நீதிமன்ற உத்தரவின் படி கோயில் காவலர் வரதனை சமயபுரம் போலீஸார் கைது செய்தனர். வரதன் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதென்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *