திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி சேவா சங்க செயலாளர் சரஸ்வதி வரவேற்புரை ஆற்றிட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை தலைமை தாங்கினார். பொருளாளர் லட்சுமி சுப்பிரமணியன், தலைவி சகுந்தலா சீனிவாசன், சங்கத் துணைத் தலைவி கமலா பண்டாரி, இணை செயலாளர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருமதி ஜனனி மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் நடனம் பாட்டு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. விழாவில் இறுதியாக பள்ளியின் செயலாளர் கீதாகௌரி நன்றியுரை ஆற்றினார்