திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையின் சார்பில் புதிய நவீன கருவி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மருத்துவமனை இயக்குனர், கோவிந்தராஜ் தலைமையில், புற்றுநோய் நிபுணர், டாக்டர் சீனிவாசன், நுரையீரல் நிபுணர், டாக்டர்கள், ராஜ்திலக், ரமணன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் அஷ்ரப், ஜமீர்பாஷா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நவீன கருவியை அறிமுகபடுத்தி சிறப்புரையாற்றினர், அதில் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையில் கிரையோதெரபி என்னும் சிகிச்சை மூச்சுகுழாய் அடைப்பு மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. கிரையோதெரபி என்பது புதிய முறை குளிர் சிகிச்சை. இதில் குளிர்ச்சியின் விகிதம் 50 முதல் 70 வரை இருக்கும். இந்த குளிர்ச்சிப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்சைடு வாயு தசைகளை செயலிழக்க செய்கிறது. இதனால் தசைகளை எளிதாக அகற்ற முடியும். இந்த செயல் முறை நுரையீரலில் தசை பரிசோதனை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரலினில் கட்டி இருந்தால் அதை அகற்றுவதற்க்கும், நுரையீரலில் அடைப்பேதும் இருந்தால் அதை விரிவுப்படுத்துவதற்கும் மற்றும் மறுபடியும் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த கிரையோதெரபி பயன்படுத்தப்படுகிறது.ஏதேனும் விதை, பருப்பு, , போன்ற பொருட்களை விழுங்கிவிட்டால் அதை நுரையீரலில் இருந்து அகற்றுவதற்கு கிரையோதெரபி பயன்படுத்தப்படுகிறது.நோயாளிகளின் தன்மையை பொறுத்து இதற்க்கு மயக்க மருந்து பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கொடுக்கப்படும். பரிசோதனை செய்த அன்றைய தினமே வீட்டிற்கு செல்லலாம் திசுக்கள் பரிசோதனை, புற்றுநோய் மற்றும் நுரையீரல் பரிசோதனையைஇந்த ப்ரோப் மூலம் எடுக்கலாம். பிரான்கோஸ்கோப்பி என்பது ஒரு வகையான நுரையீரலில் செய்யப்படும் எண்டோஸ்கோப்பி, பேனா அளவிலான ஒரு டியூபை மூக்கு அல்லது வாய் வழியாக செலுத்தி நுரையீரலின் உள்பாகங்களை ஆராயலாம் மற்றும் நோய்களை இந்த பிரான்கோஸ்கோப்பியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சேர்க்கும்போது அது இ.பி.யு.எஸ்,என்று அழைக்கப்படுகிறது.

பிரான்கோஸ்கோப்பி மூலம் கண்டறிய முடியாத நோய்களை, இந்த பிரான்கோஸ்கோப்பி உடன் சேர்ந்த அல்ட்ரா சவுண்ட் என்பது வெளியே இருந்து செய்யக்கூடிய ஒரு பரிசோதனை முறை ஆகும். ஆனால் இந்த இ.பி.யு.எஸ்.மூலம் உள்வழியாக சென்று நுரையீரலின் நெறிக்கட்டி மற்றும் புற்று நோய் கட்டிகளை ஆராய முடியும். இ.பி.யு எஸ். முறையின் மூலம் புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியவும். புற்றுநோய் உள்ளது என்றால் அது எந்த நிலையில் உள்ளது என்பதையும் துல்லியமாக கண்டறிய முடியும்.நோய் மற்றும் அதனுடைய நிலை இவை இரண்டையும் ஒரே நேரத்தில் கண்டறிய கூடிய ஒரு நவீன கருவி தான் இந்த இ.பி.யு.எஸ் பரிசோதனை செய்த அன்றே வீட்டிற்கு செல்லலாம். என தெரிவித்தனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *