மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி சண்முகம் அவர்களுக்கு வீரவணக்க நாள் ஊர்வலம் திருச்சி கோயினூர் திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கி சாஸ்தி ரோடு அண்ணா நகர் வழியாக தியாகி சின்னசாமி சண்முகம் கல்லறை சென்றடைந்தது. இந்த வீரவணக்க நாள் ஊர்வலத்திற்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமை தாங்கினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி சண்முகம் அவர்களுக்கு வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் முஸ்தபா தலைமை தாங்கினார் மாநகர மாணவரணி அமைப்பாளர் மகேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *