சிவபெருமானில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம் விழா கோயிலின் வெளியேயுள்ள இராமதீா்த்தக் குளத்தில் நடைபெறும்

இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப விழாவையொட்டி இன்று மாலை சுவாமியும், அம்மனும் மரக்கேடயத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனா்.

வழிநெடுக உபயங்கள் கண்டருளி, இராமதீா்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைத்தெப்பத்தில் 7 மணிக்கு எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை சுற்றி வலம் வந்தபோது கரையில் காத்திருந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் அங்கிருந்து சுவாமியும், அம்மனும் புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *