2021 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு பிரார்த்தனைகளை பேராயர்கள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *