இந்திய நிற மாலை இயல் கூட்டமைப்பும், திருச்சி தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறையும் இணைந்து நடத்திய பொருள் அறிவியல் பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று திருச்சி தூய வளனார் கல்லூரியில் தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

ஆராய்ச்சி மாணவர்கள் பலரும் பங்கு கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தொடக்க நிகழ்ச்சியில் துறைத் தலைவர் திரு.என் ரவி அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயலர் டாக்டர் அமல் வாழ்த்துரை வழங்கினார். இஸ்பாவின் நிறுவனர் டாக்டர் குணசேகரன் மற்றும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் சற்குருமூர்த்தி அவர்களுக்கும், சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர் சகாயராஜ் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன இஸ்பா நிறுவனர் டாக்டர் குணசேகரன் விருது திருச்சி தூய வளனார் கல்லூரியின் முன்னாள் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் லாரன்ஸ், டாக்டர் ரவி மற்றும் டாக்டர் ஆல்பிரட் செசில் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் சால்ஸ் இந்ந இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.டாக்டர் ஜெரால்டு விஜய் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *