திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் லட்சியம் வெல்லும் மாத இதழ் மற்றும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து அப்துல் கலாம் 91வது பிறந்த நாளை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியர் விமலா வரவேற்றார். திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமையுரையாற்றினார்.

லட்சியம் வெல்லும் மாத இதழ் ஆசிரியர் சதாசிவம், இணை ஆசிரியர் ஐசக் அருள்ராஜ், நிருபர் ஜனனி, நிருபர் ஹரிஹரன், நிருபர் ஐ காட் தமிழரசு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் அப்துல்கலாம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக் கூறுகையில், ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் 15 அக்டோபர் 1931 ல் பிறந்தார்.திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்கு முன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய பங்காற்றினார். அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 நூல்களை எழுதியுள்ளார் 27 சூலை 2015 மேகாலயா,சில்லாங்கில் காலமானார் என்று நிறைவு செய்தார்.

மேதகு முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழை நினைவு கூறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மாணவரகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *