திருச்சி தென்னூர் அண்ணாநகர் கண்ணதாசன் சாலையில் வசித்து வருபவர் சாமிநாதன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை பூர்வீகமாக கொண்டவர். அங்கு, லட்சுமி காபித்தூள் என்ற கம்பெனியையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சாமிநாதன் குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 10க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு குழுவினர், சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு, அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களது பணபரிமாற்ற விபரங்கள் மற்றும் லாக்கரில் உள்ள நகைகள், ஆவணங்கள் குறித்து ஆய்வுச் செய்தனர்.மணப்பாறையில் உள்ள அவரது பூர்விக வீடு மற்றும் வீட்டின் பின்புறம் உள்ள காபித்தூள் குடோனில் சோதனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு பூட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *