திருச்சி லால்குடி கோவண்டா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் வயது 58 மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது 2 வருடங்களாக திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.‌ இந்நிலையில் கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் டயாலிசஸ் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.‌ இவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *