திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் திருவானைக்காவல் பகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் டைமன் திருப்பதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மனோகரன்,வட்ட செயலாளர் பொன்னர், கலைமணி, மகேஸ்வரன், எஸ்.கே. ராஜு, கொளஞ்சி, பேரவை செயலாளர்கள் வீரகுமார், சுடர்மதி மணிமாறன், மிட்டாய் முருகேசன், பிரஸ் வெங்கடேசன், ஐயப்பன், சீனி முகமது உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *