திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக புள்ளம்பாடி வட்டாரத்தில் உள்ள மளிகை , பேக்கரி மற்றும் இனிப்பு உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் / பதிவு சிறப்பு முகாம் , உணவு கலப்பட விழிப்புணர்வு , சட்ட மன்ற அறிவிப்பு விழிப்புணர்வு மற்றும் FOSTAC ( உணவு பாதுகாப்பு பயிற்சி ) நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் Dr.ரமேஷ்பாபு தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது .

மேலும் , புள்ளம்பாடி வியாபாரிகள் சங்க தலைவர் ரெங்கராஜன் , துணை தலைவர் ஆனந்தராமன் , செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் துணை பாலன் , கல்லக்குடி வர்த்தக சங்க தலைவர். உஸ்மான் , பொது செயலாளர் சையது ஒலி , துணை தலைவர் . சௌகத் அலி மற்றும் செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் . செயலாளர் செயலாளர் இந்நிகழ்வில் உணவு வணிகர்கள் சுமார் பேர்கள் கலந்துகொண்டனர் .

உணவு பாதுகாப்பு உரிமம் 16 பதிவு 82 விண்ணப்பங்கள் பெறப்பட்டது . அதில் 82 பேர்கள் FOSTAC பயிற்சி பெற்றுக்கொண்டனர் . மேலும் , மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் மக்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவு பெற்றிருக்க வேண்டும் எனவும் , ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தாமல் பயோ டீசலுக்கு கொடுத்து கேன்சர் நோய் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் , சட்டமன்ற அறிவிப்பு உறுதிமொழியான சூடான நெகிழியில் உணவு வைத்து பரிமாற கூடாது எனவும் , எந்த ஒரு உணவு பொருளிலும் முகப்பு சீட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உணவு பொருளை வாங்க வேண்டும் எனவும் , தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் ஒவ்வொரு உணவு வணிகர்களும் தாங்களே உணவு பாதுகாப்பு அலுவலர்களாக மாற்றம் செய்து கொண்டால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என கேட்டுக்கொண்டார் .

இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன் , பொன்ராஜ் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர் . மேலும் , பொதுமக்களும் தங்களது பகுதி அருகில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *