பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு செய்தபோது கெட்டுப்போன சுமார் 27.450 கிலோ கேக் வகைகள் மற்றும் அதன் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது சுமார் 126.650 கேக் வகைகள் மற்றும் பப்ஸ் தயாரிப்பதற்காக வைத்திருந்த கெட்டுப்போன இறைச்சிகள் ஆக மொத்தம் சுமார் 155 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன . மேலும் அந்த இரண்டு இடத்திற்கும் அவசர தடையாணை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது .

மேலும் , மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறுகையில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது என்றும் எளிதில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான கேக் போன்ற உணவு பொருட்களை உடனே அழித்துவிட வேண்டும் என்றும் ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 – இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் , பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மாவட்ட நியமன அலுவலர் புகார் எண் : 99 44 95 95 95 95 85 95 95 95 மாநில புகார் எண் : 9444042322 உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை , திருச்சிராப்பள்ளி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *