உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சியில் தலைமை ஏற்று மருத்துவமனை முதல்வர் வனிதா அவர்கள் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி உலக ஹீமோபீலியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக ஹீமோபிலியா தின கருப்பொருள் “அனைவருக்கும் அணுகல் ” என்பதாகும். ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். இக் குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் மற்றவர்களைவிட ஒப்பிடும்போது ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும். அதற்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனில் அதிக இரத்த போக்கின் விளைவாக மரணத்திற்கு வழிவகுக்கிறது.

வாயில் ஏற்படும் இரத்தப்போக்கு, சிறிய கீறலிலிருந்து அதிக இரத்தம் வெளியேறுதல், மூக்கில் ஏற்படும் இரத்தக்கசிவு ஆகிய வெளிப்புற இரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் மற்றும் மலத்துடன் இரத்தம் வருதல், உடலில் உள்ள பெரிய தசைகளில் ஏற்பட்டிருக்கும் பெரிய சிராய்ப்பில் இரத்தக்கசிவு ஏற்படுதல். காயங்கள் ஏதுமில்லாத போதிலும் மூட்டுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு, தலையில் ஏற்பட்ட சிறிய புடைப்பின் பிறகு மூளையில் இரத்தம் கசிதல் அல்லது அதித்தீவிரமான காயத்தினால் ஏற்படும் இரத்தக்கசிவு உள்ளிட்ட உட்புற ரத்தப்போக்கு ஹீமோபிலியா நோயில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

இந்நிகழ்ச்சியில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு செலுத்தப்பட்டது. ஹீமோபிலியா நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஹீமோபிலியா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து செவிலிய மாணவிகளுக்கான ஹீமோபிலியா குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். அருண் ராஜ், துணை முதல்வர் மருத்துவர். .அர்ஷியா பேகம், நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா திருவள்ளுவன்,குழந்தைகள் நலத்துறை தலைவர் சிராஜூதீன் நசீர், மருத்துவத் துறை தலைவர் . பத்மநாபன், குழந்தைகள் நல துறை பேராசிரியர் மைதிலி, ஹீமோபிலியா சிகிச்சைப் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் விஜய தேவன், ஜோசப் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *