திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உங்களின் வங்கிகணக்கை KYC அப்டேட் செய்ய வேண்டும் , ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் , ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது , இது போன்ற காரணங்களுக்காக அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து உங்களது செல்போனிற்கு வரும் SMS இல் உள்ள LINK- ஐ CLICK செய்தால் , வங்கியின் வலைதளம் போல் போலியான திரை ( FAKE WEBSITE ) தோன்றும் , அதில் உங்களது USER NAME மற்றும் PASSWORD- ஐ என்டர் செய்தவுடன் , உங்களின் ரிஜ்டர் மொபைல் நம்பருக்கு வரும் OTP- ஐ அதில் கொடுத்தவுடன் , உங்களது வங்கிகணக்கில் உள்ள பணம் உடனடியாக திருடப்பட்டுவிடும் . 2 ) எனவே பொதுமக்கள் இதுபோன்ற செல்போனிற்கு வரும் SMS இல் உள்ள LINK- ஐ CLICK செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்