தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் அதில் திருச்சி கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர் சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

10 மணி நேர விசாரணைக்கு பிறகு நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகத்தை, அமலாக்க துறையினர் தங்களது காரில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மணல் குவாரியில் பணியாற்றிய, நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சாதிக் பாட்ஷா, உதவியாளர் சத்யராஜ் ஆகியோரையும் விசாரணைக்கு அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *