திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பட்டூர், எதுமலை, சனமங்கலம், பாலையூர், வாழையூர், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்களித்த பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சனமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மூலம் 14 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றிதழ்களை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாச பெருமாள், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் விஎஸ்பி இளங்கோவன்,சனமங்கலம் ஊராட்சித் தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *