திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தற்போது திருடர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கூறுகையில்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் தமிழகத்தின் இதயமாக திகழக் கூடியதாகும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாகவும், திருச்சியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாகவும், திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வேதாரண்யம் வரைக்கும், திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பொதுமக்களின், பயணிகளின் உடமைகள், பொருள்கள் திருடு போய் வருகிறது. குறிப்பாக கடந்த 11ம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் மக்கள் வெளியூர் சென்று வந்ததால் பயணிகள் கூட்டத்தால் மத்திய பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்த நேரத்தில் பல பிக்பாக்கெட் திருடர்கள், பயணிகளின் கவனத்தை திசை திருப்பி உடைமைகளை திருடும் கும்பல் புகுந்து பயணிகள் உடைமைகளை, பொருள்களை திருடி சென்றிருக்கிறார்கள்.

இதனை அநேகர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் சமூக ஆர்வலராகிய நானும் ஒருவன். காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் பொருள் கிடைக்காத ஒரு நிலை இருக்கிறது.எனவே மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி திருடர்கள் குறித்து உஷார்ப்படுத்தும் வண்ணமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகைகள், ஒலிபெருக்கி மற்றும் அதிகப்படியான சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும். இதை நிறைவேற்றினால் நிச்சயமாக பொதுமக்களுக்கு நிம்மதியான ஒரு பயணம் இருக்கும் என்பதில் எந்த ஐய்ப்பாடும் இல்லை. திருச்சி மாநகர காவல் துறையும், குற்ற பிரிவை சார்ந்த காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தில் காவலர்கள் சாதாரண உடையில் திருடர்களை கண்காணிக்க வேண்டும். அதோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளது. கேமராக்கள் திருடர்களால் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து வேலை செய்யாமல் இருப்பதால் திருடர்களுக்கு பெரும் கொண்டாட்டம் ஆகிவிட்டது.

பேருந்துகளுக்குள் வரும் வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் போன்றவர்களை பின் தொடர்ந்து வந்து இந்த திருடும் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் உடமை திருடப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஆகவே மத்திய பேருந்து நிலையத்தில் சகஜமாக பயணிகளோடு பயணிகளாக கலந்து உலா வரும் திருடர்களை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *