திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பினை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

 திருச்சி மாவட்டத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,தமிழ்நாடு காகித ஆலை இரண்டாவது கிளை துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 29-ம் தேதி திருச்சிக்கு வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் திருச்சி விமான நிலையம் முதல் மணப்பாறை வரை உற்சாக வரவேற்பு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *