திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து செப்பு கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 300 மீட்டர் நீளம் உள்ள பருத்தி துணியாளான பிரமாண்டமான திரி தயாரிக்கப்பட்டது.

இந்த திரியை தயார் செய்து ஒரு கட்டு போல கட்டி மேலே தூக்கி சென்று கயிறு கட்டி மேலே ஏற்றி செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. பின்னர் இந்த கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடியில் நின்று கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நிற்பார்கள். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்படும் தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக நேற்று தாயுமான சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் இன்று ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எரியும்.

இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் பணியாளர்கள் செய்துள்ளனர். இதேபோன்று திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் உறையூர் வெக்காளியம்மன் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் கார்த்திகை தீபம் நாளான இன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *