மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 7 அடி உயர முழு உருவ கேக் சிலை – மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் நிறுவன இனிப்பு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன் நகரில் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இனிப்பு விற்பனை நிலையம் இன்று காலை புதிதாக திறக்கப்பட்டது. இதனையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 70 வருடங்கள் இந்திய மக்களை இசையால் மகிழ்வித்து அண்மையில் மறைந்த பாடகி தேசியக் குயில் லதா மங்கேஷ்கரை நினைவு கூறும் வகையில் அவரது முழு உருவ கேக் சிலை பொது மக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டது.

இந்த கேக்கானது 7 அடி உயரம், 70 கிலோ எடை கொண்டதாகும். மூன்று பேர் மூலம் 5 நாட்களில் தயாரிக்கப்பட்டது. மேலும் முழுவதும் கேக்கினால் செய்யப்பட்ட அவரது சிலையை பொது மக்களும், வாடிக்கையாளர்களும் பார்த்து ரசித்து சென்றனர்.

மேலும் இந்த விற்பனை நிலையத்தில் பாரம்பரிய இனிப்பு வகைகளான அதிரசம், கொழுக்கட்டை, கருப்பட்டி அல்வா, கருப்பட்டி ஜாங்கிரி, கைமுறுக்கு, கடலை மிட்டாய் போன்ற பாரம்பரிய சுவை மாறாமல் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பீட்சா, பர்கர், பாஷ்டா, சீஸ், சாட்ஸ், மில்க் ஷேக், சான்ட் விட்ச் போன்றவை தரமாகவும் சுவையாகவும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.