திருச்சியில் தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் கே.சி. ஆறுமுகம், ராமகிருஷ்ணன், வையாபுரி, ராமசாமி, துரைசாமி, ராமலட்சுமி, சம்பத், கோவிந்தராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்றுப் பேசினார்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:  வலுமையான ஜனதா தளத்தை உருவாக்குவதற்கு ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் சரத் யாதவ் முதல்கட்டமாக லோக் தந்திரிக் ஜனதா தளத்தை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்துள்ளார். அவரின் முயற்சியை தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதாதளம் வரவேற்று அவர் பயணிக்கின்ற பாதையில் தமிழ்நாடு லோக் தந்திரி ஜனதாதளம் அவரை பின்பற்றி பயணிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே மத்திய அரசு அரசு பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். மேலும் இந்திய குடியுரிமை சட்டத்தின் படி இந்தியாவில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மத்திய அரசு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு லோக் தந்திரி ஜனதாதளத்தின் மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இருக்கக்கூடிய திருச்சி மாநகராட்சியில் திருச்சி மாநகராட்சி கமிஷனராக இருக்க கூடிய முஜிபூர் ரகுமான் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளதாகவும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணி மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு லோக் தந்திரி ஜனதாதள தலைவர் ராஜகோபால் குற்றஞ்சாட்டினார். அதேபோல் இந்து அறநிலையத்துறையில் ஏராளமான ஊழல்கள் நடைபெறுகிறது. ஏராளமான கோடி சொத்துக்கள் தனியார் வசம் உள்ளது. அதனை மீட்க இந்து அறநிலைத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிகாரிகள் செய்யக்கூடிய ஊழல்களை இந்து அறநிலை துறை அமைச்சர் வெளியே கொண்டு வர வேண்டும். ஊழல் வழக்குகளை நடத்துவதற்கும், கோயில் சொத்துக்களை மீட்பதற்கு இந்து அறநிலைத்துறைக்கு என தனி சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். கோயில்களில் பற்றாக்குறையாக உள்ள பணியாளர்கள் உடனே பணியமர்த்த வேண்டும். என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *