திருச்சிராப்பள்ளி சீர்மிகு நகரத்திட்டம் – 75 ம் ஆண்டு சுதந்திரந்திருநாள் அமுதப்பெரு விழா திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் , இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக , Freedom 2 Walk and Cycle Campaign- நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது ,

அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் இணைப்பு சாலை உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள ( மேற்கு பகுதி ) சாலையில் எடமலைபட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் , யோகாசனப் பயிற்சி நிகழ்ச்சி மற்றும் மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது

இதில் மாநகராட்சி பணியாளர்கள் , அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் . மிதிவண்டி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு கொடி அசைத்து துவக்கி வைத்தார் . யோகா பயிற்சி ஆசிரியர் யோகா ஸ்ரீ ராமசாமி தலைமையில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது . மேலும் ஹாலோ எப்.எம் .106.4 சகா மற்றும் உடன் பணிபுரியும் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இந்நிகழ்ச்சியில் நகர பொறியாளாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம் , குமரேசன் ,உதவி ஆணையர்கள் சண்முகம் பிரபாகரன் திருஞானம் கமலக்கண்ணன் , செல்வபாலாஜி மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *