திருச்சி மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவராக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று மாலை திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி மண்டலம் 1 -ஆண்டாள் ராம்குமார் (ஸ்ரீரங்கம்) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மண்டலம் 2- ஜெயநிர்மலா (அரியமங்கலம்) மண்டலம் 3- மதிவாணன்(திருவெறும்பூர்) மண்டலம் 4- துர்காதேவி (பொன்மலை) மண்டலம் 5 – விஜயலட்சுமி கண்ணன் (கோஅபிஷேகபுரம்)

உள்ளிட்ட அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துணை மேயர்‌ திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்ற மண்டல தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *