உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு , மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தனர்.

முன்னதாக மேடையில் பேசிய மேயர் அன்பழகன் இந்த வருடம் இறுதிக்குள் மாநகர பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக பேசினார்.இது நிகழ்வின் போது கோட்டத் தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் , நகர் நல அலுவலர் யாழினி ,கிராமாலயா தொண்டு நிறுவன இயக்குனர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்