திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் இன்று நடந்தது. தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா வரவேற்றார்.அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் ஆகியோர் அதிமுக புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினர்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி
நிர்வாகிகள் அருள்ஜோதி, ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் இப்ராம்சா, வெல்ல மண்டி பெருமாள், வெல்லமண்டி கன்னியப்பன், தர்கா காஜா,கல்லுக்குழி முருகன், பொன்.அகிலாண்டம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.